/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்தணும்

ADDED : ஜன 07, 2024 11:21 PM

கூடலுார்;கூடலூர், கோழிக்கோடு சாலையோரம், சுற்றுலா பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வீசி செல்வதை தடுக்க வேண்டும்.
நீலகிரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் குளிர்பானம், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சமீப காலமாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவது அதிகரித்துள்ளது. பயன்படுத்திய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையோரம் வீசி செல்கின்றனர். சிலர், மதுபான பாட்டில்களையும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களை, மாநில எல்லையில், சோதனை செய்து அனுமதிப்பதால், நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவது குறைந்து வந்தது. தற்போது, மீண்டும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவது அதிகரித்துள்ளது.
தடுக்க மாநில எல்லையில் சோதனையை பலப்படுத்த வேண்டும்.' என்றனர்.