ADDED : செப் 08, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி படகு இல்ல சாலையில் தெருவிளக்கு எரியாமல் உள்ளதால், இரவில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டி படகு இல்ல சாலையில் இரவு நேரங்களில் காட்டெருமை நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் இரவில் பல தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால், பணி முடித்து நடந்த செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பர்களுக்கும் காட்டெருமை நடப்பது தெரிவதில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் எரியாமல் உள்ள தெரு விளக்குளை சீரமைக்கவும், தெரு விளக்கு இல்லாத பகுதியில் புதிய விளக்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
