/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணி தவற விட்ட நகை இரண்டு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
/
சுற்றுலா பயணி தவற விட்ட நகை இரண்டு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சுற்றுலா பயணி தவற விட்ட நகை இரண்டு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சுற்றுலா பயணி தவற விட்ட நகை இரண்டு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ADDED : மார் 12, 2024 01:03 AM
ஊட்டி;ஊட்டியில் சுற்றுலா பயணி தவறவிட்ட நகை, இரண்டு மணிநேரத்தில் மீட்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் சிங். இவர் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு வெளியே வந்தபோது அவரது கையில் இருந்த, 2 பவுன் தங்க பிரேஸ்லெட் நகை காணவில்லை.
இதனால், பதறிப்போன அவர், அரசு தாவரவியல் பூங்கா முன்பு புதிதாக திறக்கப்பட்ட போலீஸ் உதவி மையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில், எஸ்.ஐ., சுரேஷ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடைக்கு வெளியே வந்த போது, அங்கிருந்த பொருள் மீது கைபட்டு பிரேஸ்லெட் கீழே விழுந்தது தெரிய வந்தது. இது தெரியாமல் நிர்மல் சிங் சென்று விட்டார்.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்ததில் பிரேஸ்லெட் அங்கேயே இருந்தது உடனடியாக பிரேஸ்லெட்டை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஒரு மணி நேரத்தில் இரண்டு பவுன் நகையை மீட்டு கொடுத்த போலீசாரை சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.