/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகளின் பாதுகாப்பு அவசியம்; மலை ரயில் பாதையில் வேலி வேண்டும்
/
கால்நடைகளின் பாதுகாப்பு அவசியம்; மலை ரயில் பாதையில் வேலி வேண்டும்
கால்நடைகளின் பாதுகாப்பு அவசியம்; மலை ரயில் பாதையில் வேலி வேண்டும்
கால்நடைகளின் பாதுகாப்பு அவசியம்; மலை ரயில் பாதையில் வேலி வேண்டும்
ADDED : பிப் 28, 2024 12:31 AM

ஊட்டி;ஊட்டி மலை ரயில் நிலையத்தில் இருந்து , ஒரு கி.மீ., தொலைவில் பெர்ன்ஹில் பகுதி அமைந்துள்ளது.
மலை ரயில் பாதையை ஒட்டிய இப்பகுதியில் சதுப்பு நிலம் அமைந்துள்ளது. தற்போது, வறட்சி காரணமாக, சதுப்பு நிலம் வரண்டு காணப்பட்டாலும், புல்வெளியில் ஆங்காங்கு சிறு,சிறு குழிகளில் தண்ணீர் உள்ளது. இப்பகுதியில் உள்ள புல்வெளி புற்களை மேய்வதற்கு வளர்ப்பு எருமைகள் கூட்டமாக வருகின்றன.
இவ்வாறு வரும் வளர்ப்பு எருமைகள், அவ்வப்போது, மலை ரயில் பாதையை கடக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் மலை ரயில் வரும் போது விபத்துக்கள் ஏற்பட்டு, அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், மலை ரயில் மோதியதில் வளர்ப்பு எருமை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் மலை ரயில் பாதையில் கால்நடைகள் கடப்பதை தடுக்க வேலி அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.