/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 12:36 AM

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் மற்றும் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில், 'இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பெயர் மாற்றம் செய்யவிருந்த அரசாணையை வெளியிடவேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,' என்பன உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சங்கநிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட, அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

