/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் உயிலட்டி நீர்வீழ்ச்சி ரம்மியம்
/
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் உயிலட்டி நீர்வீழ்ச்சி ரம்மியம்
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் உயிலட்டி நீர்வீழ்ச்சி ரம்மியம்
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் உயிலட்டி நீர்வீழ்ச்சி ரம்மியம்
ADDED : அக் 19, 2025 07:57 PM
கோத்தகிரி: கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா மையங்கள் நிறைந்து இருந்தாலும், சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறாத பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில், கோத்தகிரி - கூக்கல்தொரை இடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
மாவட்டத்தின் முதல் கலெக்டர் அலுவலகமான கன்னேரிமுக்கு ஜான் சலீவன் நினைவிடம் அருகே, இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், அவ்வப்போது சுற்றுலாப் பயணியர் மற்றும் உள்ளூர் மக்கள் நீர்வீழ்ச்சியை கண்டு களித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாறை இடுக்குகளில் இருந்து கொட்டும் தண்ணீர், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.