ADDED : அக் 19, 2025 07:57 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், பல இடங்களில் மண் சரிவுடன், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு, விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக, 137 மி.மீ., கீழ்கோத்தகிரியில், 102 மி.மீ., போடு நாட்டில், 92 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் செயற்கை யான நீரூற்றுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கோத்தகிரி,- கோடநாடு மற்றும் சோலுார்மட்டம், குயின் சோலை உட்பட பல்வேறு பகுதிகளில், சாலையோர மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.
இதனால், இவ்வழிடத்தில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் மரங்களை உடனுக்குடன் அகற்றி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டபெட்டு மற்றும் சோலூர்மட்டம் உட்பட, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்டன.
அரக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, மல்ல கொப்பையூர் உள்ளிட்ட பகுதிகளில், 10 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி சேதம் அடைந்தன.