ADDED : அக் 19, 2025 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு அருகே, இடி, மின்னல் தாக்கி பெண்ணுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே, கூற்றநாடு, சாலிச்சேரி, திருத்தால ஆகிய பகுதிகளில் இரவு, இடியுடன் கன மழை பெய்தது. இந்நிலையில், இடி, மின்னல் தாக்கி கூற்றநாடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி, 40, என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இடி, மின்னலில் அவரது வீட்டில் இருந்து மின் இணைப்பு, கிணற்றில் இருந்த மோட்டார் மற்றும் சுவிட்ச் போர்டுகள் அனைத்தும் சேதமடைந்தன.