சுருங்கி வரும் நீரோடை: நாள்தோறும் அதிகரிக்கும் கழிவு
சுருங்கி வரும் நீரோடை: நாள்தோறும் அதிகரிக்கும் கழிவு
UPDATED : செப் 08, 2026 06:16 PM
ADDED : செப் 08, 2026 05:32 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பஜார் பகுதி நீரோடை ஆக்கிரமிப்பில் சுருங்கி வரும் நிலையில், கழிவுகள் நிறைந்து வருகிறது.
பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், பாண்டியார் புன்னம்புழா ஆற்றின் முக்கிய நீராதாரமாக ஏரோடு பகுதி உள்ளது. இங்குள்ள மலையிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீர், தேவாலா பஜார் வழியாக நீரோயாக செல்கிறது. இந்த நீரோடையில் தேவாலா பஜார் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களில், கழிவுகள் திறந்து விடப்பட்டு மாசடைந்து வருகிறது. அத்துடன் ஆக்கிரமிப்பில் சிக்கி நீரோடை சுருங்கி வருவதுடன், புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, நீரோடையை சுத்தம் செய்து, கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
