/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொலிவாகும் சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீரூற்று கோபுரம்
/
பொலிவாகும் சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீரூற்று கோபுரம்
ADDED : மார் 21, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள, ஆடம்ஸ் நீருற்று கோபுரத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
ஊட்டியின் மைய பகுதியான சேரிங்கிராசில் ஆடம்ஸ் நீருற்று கோபுரம் உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இந்த நீரூற்று அமைந்துள்ளது.
கோடை சீசன் சமயத்தில் அழகுடன் வெளியேறும் நீர், மின்னொளி பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணியர் இதன் அருகே நின்று செல்பி மற்றும் போட்டோ எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் கோடை சீசன் துவங்குகிறது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீரூற்று கோபுரத்தை வர்ணம் பூசி பொலிவுப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.