/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கியவர் பலி
/
தேயிலை தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கியவர் பலி
ADDED : அக் 21, 2024 06:13 AM

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, தனியார் தேயிலை தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பலியானார்.
கோத்தகிரி அரவேனு பகுதியில், பிரபலமான தனியார் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்,51, என்பவர் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,10:30 மணி அளவில், தேயிலை அரைக்கும் இயந்திரம் இயங்கிய போது, சுத்தம் செய்யும் பணியில் சிவக்குமார் ஈடுபட்ட நிலையில், அவர் அணிந்திருந்த உடை, இயந்திரத்தில் சிக்கியதில், கழுத்துடன் இழுத்து செல்லப்பட்டது. அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு, கோமதி என்ற மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.