/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்றும் பணியில்..மந்த நிலை?:அழியும் அபாயத்தில் இயற்கை புல்வெளிகள்
/
நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்றும் பணியில்..மந்த நிலை?:அழியும் அபாயத்தில் இயற்கை புல்வெளிகள்
நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்றும் பணியில்..மந்த நிலை?:அழியும் அபாயத்தில் இயற்கை புல்வெளிகள்
நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்றும் பணியில்..மந்த நிலை?:அழியும் அபாயத்தில் இயற்கை புல்வெளிகள்
ADDED : டிச 12, 2025 07:15 AM

ஊட்டி: 'நீலகிரி வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அகற்றும் பணி மந்த கதியில் நடந்து வருவதை விரைவுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, 2.60 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வனத்துறை வாயிலாக நடந்து வருகிறது. மறுபுறம், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான நீலகிரியில் கற்பூரம்,சீகை, உண்ணிச்செடி உள்ளிட்ட அன்னிய மரம் அதிகரித்து உள்ளதால் வன விலங்குகள் உட்பட தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.
பணிகளில் தொய்வு நீலகிரி வனக்கோட்டம் சார்பில், 'ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா,' உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டன.
ஊட்டி அருகே தலைகுந்தா, அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் அகற்றும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. ஊட்டி அருகே, வென்லாக்டவுன் மலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சீகை, கற்பூர மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
மேலும், அன்னிய மரங்கள் அகற்றிய இடங்களில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அந்த பகுதிகளில் மீண்டும் சீகை, கற்பூரம் மரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அகற்ற நடவடிக்கை மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,''நீலகிரி வனகோட்டத்தில் அன்னிய மரங்கள், 1500 ஏக்கர் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளன. இன்னும் பல ஏக்கர் அகற்றப்பட உள்ளது. அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் மரங்கள் வளராத அளவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வப்போது பெய்த மழை காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது. ஜன., மாதத்திலிருந்து வெயில் தென்படும் சமயங்களில் அன்னிய மரங்கள் அகற்றிய இடங்களில் மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

