/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூரல்மலை பகுதியில் நிலவும் தீரா சோகம்; கனத்த இதயத்துடன் ஓட்டு போட்ட மக்கள்
/
சூரல்மலை பகுதியில் நிலவும் தீரா சோகம்; கனத்த இதயத்துடன் ஓட்டு போட்ட மக்கள்
சூரல்மலை பகுதியில் நிலவும் தீரா சோகம்; கனத்த இதயத்துடன் ஓட்டு போட்ட மக்கள்
சூரல்மலை பகுதியில் நிலவும் தீரா சோகம்; கனத்த இதயத்துடன் ஓட்டு போட்ட மக்கள்
UPDATED : டிச 12, 2025 08:59 AM
ADDED : டிச 12, 2025 07:16 AM

பந்தலுார்: பேரிடர் நடந்த வயநாடு, சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதியில், கனத்த இதயத்துடன் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஓட்டு போட்ட மக்கள், தீரா சோகங்களை பகிர்ந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள வயநாடு மாவட்டத்தில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை பகுதிகளில், கடந்த, 2024 ஜூலை, 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில், 413 பேர் உயிரிழந்ததுடன், 293 பேர் காணாமல் போயினர்.
தொடர்ந்து, நீலகிரியில் சேரம்பாடி, கேரளாவின் பாலக்காடு, மேப்பாடி, மீனங்காடி, மானந்தவாடி, கல்பெட்டா உள்ளிட்ட பகுதிகளில், பேரிடரின் போது, மீட்கப்பட்டவர்கள், தற்காலிகமாக குடியேறினர். அதில், முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில், 2 ஓட்டுச்சாவடிகளில் வாழ்ந்த, 980 குடும்பங்களில், 2,286 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது, 270 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு இருந்த நிலையில் மற்றவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அட்டமலையில், 1,130 வாக்காளர்கள் இருந்த நிலையில், 825 வாக்காளர்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று நடந்த தேர்தல் இந்நிலையில், நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில், சூரல்மலை, முண்டக்கை பகுதிகளை ஒன்றாக சேர்த்து, 11ம் வார்டாக அறிவிக்கப்பட்டது. அட்டமலை, 10-ம் வார்டாக அறிவித்து தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் கல்பெட்டா, வைத்திரி, மீனங்காடி,மேப்பாடி பகுதிகளில் இருந்து, வாக்காளர்களை ஓட்டு சாவடி மையங்களுக்கு அழைத்து வர, கேரளா மாநில அரசு பஸ் இயக்கப்பட்டது.
உறவினர்களை பார்த்து கண்ணீர் பேரிடருக்கு பின்னர் இங்கு வந்த வாக்காளர்கள், ஓட்டு போட்டவுடன் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை பார்த்து கண்ணீர் விட்டு, அங்கு வந்த தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து, பழைய சோகங்களை அழுகையுடன் பகிர்ந்து கொண்டனர்.
அப்பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அணில் கூறுகையில்,''சூரல்மலை, முண்டக்கை பகுதி வாக்காளர்களுக்கு, நீலிக்காப்பு தேவாலயம், விருதசதனா கட்டடத்திலும், ஓட்டுசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள், ஓட்டு போட்டனர். அனைவரின் முகங்களிலும் பேரிடர் சம்பவத்தின் சோகம் நீங்காமல் இருந்தது,'' என்றார்.

