/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மலைப்பாதையில் கூடுதலாக மலை ரயில் இயக்க... வாய்ப்பு இருந்தும் பயனில்லை! கோடை சீசனில் பயணம் செய்ய வருபவர்கள் ஏமாற்றம்
/
நீலகிரி மலைப்பாதையில் கூடுதலாக மலை ரயில் இயக்க... வாய்ப்பு இருந்தும் பயனில்லை! கோடை சீசனில் பயணம் செய்ய வருபவர்கள் ஏமாற்றம்
நீலகிரி மலைப்பாதையில் கூடுதலாக மலை ரயில் இயக்க... வாய்ப்பு இருந்தும் பயனில்லை! கோடை சீசனில் பயணம் செய்ய வருபவர்கள் ஏமாற்றம்
நீலகிரி மலைப்பாதையில் கூடுதலாக மலை ரயில் இயக்க... வாய்ப்பு இருந்தும் பயனில்லை! கோடை சீசனில் பயணம் செய்ய வருபவர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 14, 2025 06:54 AM

நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் என்.எம்.ஆர்., எனும், நீலகிரி மலை ரயில், நுாற்றாண்டுகள் கடந்தும், சுற்றுலா பயணிகளை தற்போதும் ஈர்த்து வருகிறது. சிறப்பு பெற்ற மலை ரயிலுக்கு, 2005ல் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது.
இந்த ரயில், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு தினமும், காலை, 7:45 மணி; பகல், 12:35 மணி; மாலை, 4:00 மணி; ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு காலை, 9:00 மணி; பகல், 12:15 மணி; மாலை, 5:30 மணிக்கு இயக்கப்படுகிறது.
இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 4 பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில், குன்னுார் வந்ததும், கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, 5 பெட்டிகளுடன், ஊட்டிக்கு செல்கிறது.
இந்த ரயில் ஊட்டியில் மதியம், 2:10 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு மீண்டும் செல்கிறது.
சீசன் சிறப்பு ரயில்கள்
தற்போது, ஊட்டி சீசனை முன்னிட்டு, சிறப்பு ரயில் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை, 7ம் தேதி வரை, வாரம் தோறும் வெள்ளி முதல் திங்கள் வரை, 4 நாட்களுக்கு, காலை, 8:20 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கும், மாலை, 4:45 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னுாருக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
இதேபோல, ஜூலை, 6 வரை, வெள்ளி, ஞாயிறு தினங்களில் மட்டும், மதியம், 2:50 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னுாருக்கும், சனி, திங்கள் கிழமைகளில், காலை, 9:20 மணிக்கு, குன்னுாரில் இருந்து ஊட்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே, 4 நாட்களில் காலை, 9:45 மணி; காலை 11:30 மணி; மாலை 3:00 மணி என தினமும், 3 முறை, 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' என்ற பெயரில் ஊட்டிகேத்தி இடையே சிறப்பு சுற்று ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயன்படுத்தப்படாத நீராவி இன்ஜின்; கோச்கள்
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''நாட்டின் தனித்துவமான பாரம்பரிய ரயில் சேவையில், பயணிக்க சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதால், வார இறுதி நாட்களில் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆங்கிலேயர் காலத்தில் ஆச்சரியப்படும் விதமாக, 17 ரயில் சேவைகள், நிலக்கரி நீராவி இன்ஜின்களில் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அனைத்து வசதிகள் இருந்தும் தற்போது ஏன் செயல்படுத்தப்பட வில்லை.
இந்த பாதையில், புதிதாக, 25 பெட்டிகள் மற்றும் 9.5 கோடி ரூபாய் செலவில், புதிய நீராவி இன்ஜின், இயங்கும் நிலையில் இருந்தும் பயன் படுத்தப்படாமல் உள்ளது. இதனை ரயில்வே துறை ஆய்வு செய்து, உடனடியாக கூடுதல் சிறப்பு ரயில்களை ஜூலை வரை இயக்க வேண்டும்,'' என்றார்.
அடிப்படை வசதிகள் அவசியம்
ரயில் பயணிகள் கூறுகையில், 'மேட்டுப் பாளையம் கல்லார், ஹில்குரோவ், ஆடர்லி மற்றும் ரன்னிமேடு நிலையங்களில் தண்ணீர், கவுன்டர்கள் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டும் பயனில்லாமல் மூடப்பட்டுள்ளன.
குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள், 3 மணி நேரத்திற்கு மேலான பயணத்தை மேற்கொள்வதில் சிரமங்களை சந்திக்கின்றனர். பலர் இங்குள்ள திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பொது சுகாதாரம் பாதிக்கிறது.
மேலும், 'பிரைவேட் டூரிஸ்ட், சார்ட்டட் டிரைன்' போன்ற சேவைகளை அதிகரிக்க கூட்டு மேலாண்மை திட்டம் கொண்டு வரவேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்,' என்றனர்.

