/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்சரிவு ஏற்பட்டதால் மரங்கள் விழும் அபாயம்
/
மண்சரிவு ஏற்பட்டதால் மரங்கள் விழும் அபாயம்
ADDED : நவ 08, 2024 10:46 PM

குன்னுார்; குன்னுார் கிளண்டேல் குடியிருப்பு பகுதிகளில், மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மரங்கள் விழும் அபாயம் உள்ளது.
குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட கிளண்டேல் குடியிருப்பு பகுதியில், மழையின் காரணமாக, 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதில், வீடுகளின் பின் பகுதியில் மண், சேறு தேங்கி வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
மண்சரிவு ஏற்பட்டதால், மேற்பகுதியில் உள்ள, 5 மரங்கள் வீடுகளின் மீது விழும் அபாயம் உள்ளது. இப்பகுதியில், உலிக்கல் பேரூராட்சி சார்பில் நடைபாதை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால், நடைபாதை மற்றும் குடியிருப்புகளும் இடியும் அபாயம் உள்ளது. மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க, அபாய மரங்களை வெட்டி அகற்றி, தடுப்பு சுவர் அமைக்கவும் வேண்டும்,' என்றனர்.