/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை
/
நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை
நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை
நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை
ADDED : ஜூலை 15, 2025 08:18 PM

ஊட்டி; 'நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,' என, கலெக்டர் தெரிவித்தார்.
கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், வயநாடு, திருச்சூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில்,தமிழக -கேரள எல்லையான, நீலகிரியில் உள்ள பிதர்காடு, தாளூர், கீழ்நாடுகாணி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.
' நிபா வைரஸ்' தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டால் சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கபட்டுள்ளது. நீலகிரியில் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்று குழுக்கள் மேற்கண்ட சோதனை சாவடிகளில், 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
வாகனங்களில் வருவோருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் இந்த குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
நீலகிரி நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

