/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை
/
சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை
சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை
சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை
ADDED : பிப் 20, 2024 06:13 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 11 வது வார்டு அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், நடைபாதைகள் சேதமடைந்து உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில், கடலக்கொல்லி, மாங்கம்வயல் செல்லும் மண் சாலையை சீரமைக்க, கிராம மக்கள், வார்டு உறுப்பினர் தொடர்ந்து மனுப்போர் நடத்தி வந்த நிலையில், கடந்த, 2021ல் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 24 லட்சம் ரூபாய் செலவில், மண் சாலை 'சோளிங்' சாலையாக மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது கற்கள் முழுமையாக பெயர்ந்து, நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லாத நிலையில், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே, இப்பகுதி மக்கள் வெளியில் சென்று வருகின்றனர்.
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், 700 மீட்டர் துாரமுள்ள மேட்டுப்பாங்கான சாலையில் நடந்தே வருகின்றனர். தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டி, 50 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் இவர்களை புறக்கணித்து வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

