விலங்கூரில் குடிநீர் பிரச்னை கண்டுகொள்ள யாருமில்லை
விலங்கூரில் குடிநீர் பிரச்னை கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : செப் 25, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விலங்கூர் கிராமம் உள்ளது.
வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், தினசரி யானைகள் வந்து செல்கின்றன. யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக, குடிநீர் குழாய்களை உடைப்பதால், அடிக்கடி குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் அருகில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்கின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில்,‘தொடர்ச்சியாக எஸ்டேட் நிர்வாகிகளால் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத சூழலில், பாதிப்பை தடுப்பதற்கு குடிநீர் குழாய்களை, மண்ணிற்கு அடியில் புதைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
