/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஜன 25, 2024 12:16 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. இன்று தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் கரையில், மிகவும் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, (23ம் தேதி) காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
நேற்று மாலை, 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேதராக, சுப்பிரமணிய சுவாமிக்கு அலங்காரம் செய்து வைத்தனர். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருமண வைபவங்கள் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலி சரடு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி, இன்று மதியம் அலங்காரம் செய்த தேருக்கு எழுந்தருளுகிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று மாலை, 3:15 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோன்று குருந்த மலை குழந்தை வேலாயுதசாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.