/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட மைய நுாலகத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி; போட்டிகளில் வெற்றி பெற்றால் பரிசு

ADDED : டிச 23, 2024 10:33 PM

ஊட்டி; நீலகிரி மாவட்ட மைய நுாலகத்தில் திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு, 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டு வெள்ளி விழா கொண்டாட்டம் நடக்கிறது.
இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட மைய நுாலகத்தில், 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்படம்; புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதில், திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தல் , திருக்குறள் விளக்க உரைகளையும், திருக்குறள் தொடர்பான புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நுாலக வாசகர்களை கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி, பேச்சு போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாவது பரிசாக, 3,000 ரூபாய், மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். சான்றிதழ்கள் வழங்கப்படும்.