/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இரண்டாவது சீசனில் இதம்; சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

ADDED : செப் 22, 2024 11:36 PM

ஊட்டி : ஊட்டியில் நிலவி வரும் இரண்டாவது சீசனை ஒட்டி சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரண்டாவது சீசன் நிலவி வருகிறது. இதனையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவில், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன், மாடங்கள், பாத்திகளில் பல்வேறு வகையான, 4 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கேரளா, கர்நாடகா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து கணிசமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணியர்
ஊட்டியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை தொடர்ந்து, பல்வேறு வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர்.
அவர்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், புனித ஸ்டீபன் ஆலயம், இருதய ஆண்டவர் ஆலயம், அரசு கலை கல்லுாரி கட்டடம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டடங்களை பார்த்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள வெளிநாட்டு மரங்களை பார்வையிடுவதுடன், ஊட்டியில் விளையும் காய்கறிகள், பழங்களையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.