/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூஞ்சூறு எலி; ஊட்டி ஏரி அருகே காணப்பட்டதால் வியப்பு
/
அழிந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூஞ்சூறு எலி; ஊட்டி ஏரி அருகே காணப்பட்டதால் வியப்பு
அழிந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூஞ்சூறு எலி; ஊட்டி ஏரி அருகே காணப்பட்டதால் வியப்பு
அழிந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூஞ்சூறு எலி; ஊட்டி ஏரி அருகே காணப்பட்டதால் வியப்பு
ADDED : டிச 11, 2025 05:43 AM

குன்னுார்: ' அழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட அரிய வகை மூஞ்சுறு எலி, ஊட்டியில் காணப்பட்டது குறித்த பதிவுகள் கிடைத்துள்ளதால்,ஆய்வுகளை மீண்டும் துவக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இரு நுாற்றாண்டுகளுக்கு முன்பு வந்த, ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்ச்காரர்கள் வருகை தந்து, பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதனை புத்தகங்கள், ஓவியங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுகள் தற்போது உலக அளவில் டிஜிட்டல் நுாலகங்களில் உள்ளன.
மூஞ்சூறு எலியின் குறிப்பு இந்நிலையில், பிரெஞ்ச் உயிரியல் ஆராய்ச்சியாளர் பியர் சோனெராட் என்பவர் நம் நாட்டில் பல அரிய உயிரினங்களை தத்ரூபமாக வரைந்து,அதன் விவரங்களை டைரி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில், 1813ல், புதுச்சேரி அருகே உடலின் நடு பகுதியில் வெள்ளை நிற பட்டையுடன் காணப்பட்ட மூஞ்சூறு எலி குறித்த உருவத்தை வரைந்து அதன் குறிப்பு எழுதி வைத்துள்ளார். தொடர்ந்து, மூஞ்சூறு குறித்து, 2011ல் வன உயிரின ஆராய்ச்சியாளர் ஆண்டனி செக்கே என்பவர் நடத்திய ஆய்வுக்கு பின், 'டிப்ளோமசோடன் (சோனெராட் ஷ்ரூ)' என, 2018ல் அதற்கு பெயர் சூட்டப்பட்டது.
அதன் பிறகு பதிவுகள் இல்லை அதன் பிறகு மூஞ்சூறு பதிவுகளுக்கான தரவுகள் எங்கும் இல்லை. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி ஏரி கரையோரம், 2022ல் மூஞ்சூறு எலி ஒன்று இறந்து கிடந்ததை, வன உயிரின ஆராய்ச்சி குழுவின் மொய்னுதின், சாம்சன், முகமது சாஹிர், அபினேஷ், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்டறிந்தனர்.
வன உயிரின ஆராய்ச்சியாளர் மொய்னுதீன் கூறுகையில்,''பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்.,) இந்த உயிரினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்த உயிரினமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2022ல் மூஞ்சூறு எலி இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் ஆய்வுகள் குறித்து ஈரானிய வனவிலங்கு உயிரியல் அமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அழிந்து விட்டதாக கருத்தப்பட்ட உயிரினம் நீலகிரியில் உள்ளதால்,இதனை கண்டறிந்து ஆய்வு செய்ய, அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கினால் நிச்சயம் கண்டறிய முடியும்,'' என்றார்.

