/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று வாலிபர்கள் கைது
/
போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று வாலிபர்கள் கைது
போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று வாலிபர்கள் கைது
போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று வாலிபர்கள் கைது
ADDED : மார் 12, 2026 05:06 AM
ஊட்டி: ஊட்டி அருகே, டாஸ்மாக் மது கடையில் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி அப்பர்பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை எப்போதும் அதிக அளவு இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிக அளவு இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள், 3 பேர் மது அருந்திவிட்டு அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்குள்ள ஊழியர்கள் தடுத்து பார்த்தும் பயன் இல்லாததால், ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், போலீஸ்காரர் பிரபு என்பவர் டாஸ்மாக் மது கடைக்கு சென்றார். அப்போது வாலிபர்களை அமைதியாக வீட்டுக்கு செல்லும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார். மது போதையில் இருந்த வாலிபர்கள் எதையும் கவனத்தில் எடுக்காமல் போலீஸ்காரர் பிரபுவை பீர் பாட்டிலால் தாக்கினர். அப்போது, கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு பின், காந்தள் பகுதியை சேர்ந்த அகமதுல்லா, மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், வி.சி., காலனி பகுதியைச் சேர்ந்த டேனீஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

