/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருட்களுடன் வந்த மூன்று வாலிபர்கள் கைது
/
போதை பொருட்களுடன் வந்த மூன்று வாலிபர்கள் கைது
ADDED : ஜன 13, 2024 01:13 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் போதை பொருளுடன் வந்த, மூவர் கைது செய்யப்பட்டனர்.
பந்தலுார் அருகே நாடுகாணி சோதனை சாவடியில், தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவிலிருந்து, கூடலுார் நோக்கி சென்ற காரை சோதனையிட்டனர்.
காரில் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், 'கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து, கூடலுார் அருகே உள்ள பால்மேடு பகுதி தனியார் விடுதிக்கு செல்வதாகவும், 'எம்.டி.எம்.ஏ.,' மற்றும் கஞ்சா ஆகிய போதை பொருட்களை தங்களின் உபயோகத்திற்காக கொண்டு வந்தோம்,' என, தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இரண்டு கார்கள் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த, ஜிபின் 26, ராதாகிருஷ்ணன் 29, கண்ணனுாரை சேர்ந்த செமீர், 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.