ADDED : மார் 16, 2026 06:46 AM

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், நம் நாடு உட்பட நட்பு நாடுகளின் முப்படை இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் 'மவுண்டன் ஜிம்கானா' சார்பில், ஜிம்கானா மைதானத்தில், ஆண்டு தோறும் குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நடத்தப் பட்டு வருகிறது. நடப் பாண்டு போட்டியை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண் டன்ட் லெப்., ஜெனரல் மனிஷ் எர்ரி துவக்கி வைத்தார்.
முப்படைகளை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுரேஷ், ரியர் அட்மிரல் வினோத் குமார், மார்சல் பிராஜுவல் சிங் முன்னிலை வகித்தனர்.
81வது பயிற்சி ராணுவ அதிகாரிகளின் கம்பீரமான குதிரை அணிவகுப்பு நடந்தது. தேசியகொடி, கல்லூரி கொடி, முப்படைகளின் கொடிகளை குதிரைகளில் மிடுக்காக அதிகாரிகள் அணிவகுத்து வந்தனர்.
தடை தாண்டுதல், ஓடும் குதிரைகளில் வரும் அதிகாரி, ஈட்டியால் பொருளை எடுத்தல் , நெருப்பு வளையத்திற்குள் தாண்டி வருதல், ஜீப், பைக் வாகனங்களை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஜெனரல் மனிஷ் எர்ரி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஏற்பாடுகளை, கர்னல் சக்தி கே முகுந்த் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
