/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டிக்கு சென்ற அரசு பஸ்சில் 'மொபைல்' டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட்
/
ஊட்டிக்கு சென்ற அரசு பஸ்சில் 'மொபைல்' டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட்
ஊட்டிக்கு சென்ற அரசு பஸ்சில் 'மொபைல்' டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட்
ஊட்டிக்கு சென்ற அரசு பஸ்சில் 'மொபைல்' டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட்
ADDED : நவ 25, 2024 10:24 PM

குன்னுார்; குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன் தினம் இரவு சென்ற அரசு பஸ்சில், விளக்குகள் எரியாததால், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் கண்டக்டர் டிக்கெட் வழங்கிய அவலம் நடந்தது.
குன்னுார்-- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழமை வாய்ந்தவையாக உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:15 மணியளவில் குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு, (டி.என்.43., என்- 0648) எண் கொண்ட அரசு பஸ் சென்றது.
இந்த பஸ்சில் திடீரென உள்ளே இருந்த விளக்குகள் எரியாமல் போனது. திடீரென ஒரு விளக்கு எரிந்த போதும், மீண்டும் முழுமையாக மங்களானது. இதனால், கண்டக்டர் டிக்கெட் வழங்க முடியாமல், மொபைல் போன் டார்ச் ஆன் செய்து, அதன் மூலம் டிக்கெட் வழங்கினார்.
பயணிகள் கூறுகையில், 'நீலகிரியில் பெரும்பாலான அரசு பஸ்கள் பழமை வாய்ந்ததாக உள்ளதால் ஆங்காங்கே பழுதடைந்து நின்று விடுகிறது. இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இது போன்ற பஸ்களை இயக்கும் அரசு போக்குவரத்து கழகம் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை. மாறாக பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது.
எனவே, நீலகிரி மாலை மாவட்டத்தில் அனைத்து பழைய பஸ்களையும் மாற்றி, புதிய பஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.