/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
/
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
ADDED : டிச 03, 2025 06:36 AM
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு ஒன்று பலியானது.
கூடலுார் தேவர்சோலை சர்கார்மூலா, கொட்டாய் மட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மாடுகளை தாக்கி கொன்ற புலி வனத்துறை வைத்த கூண்டில், 29ம் தேதி சிக்கியது. அதனை மீட்டு முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் தேவர்சோலை, சர்க்கார்மூலா பகுதியில், மேய்ச்சலுக்கு விட்டிருந்த நாராயணன் என்பவரின் பசு மாட்டை புலி தாக்கி கொன்றது.
கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''அப்பகுதியில், மீண்டும் புலி தாக்கி, மாடு இறந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அங்கு தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். மக்கள் அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையும், இரவில் தனியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

