/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அஜ்ஜூர் மக்கள் வசிப்பிடம் புறம்போக்கு நிலம் ஆர்.டி.ஐ., வாயிலாக தகவல்
/
அஜ்ஜூர் மக்கள் வசிப்பிடம் புறம்போக்கு நிலம் ஆர்.டி.ஐ., வாயிலாக தகவல்
அஜ்ஜூர் மக்கள் வசிப்பிடம் புறம்போக்கு நிலம் ஆர்.டி.ஐ., வாயிலாக தகவல்
அஜ்ஜூர் மக்கள் வசிப்பிடம் புறம்போக்கு நிலம் ஆர்.டி.ஐ., வாயிலாக தகவல்
ADDED : டிச 03, 2025 06:36 AM
ஊட்டி: 'அஜ்ஜூர் கிராம மக்கள் வசிக்கும் பகுதி புறம்போக்கும் நிலம்,' என, தகவல் பெறும் உரிமை சட்ட வாயிலாக தெரியவந்துள்ளது.
ஊட்டி அடுத்த கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில், 350 படுகர் இன குடும்பங்கள், 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இவர்களுக்கு அரசு சார்பில், பள்ளி, சமுதாய கூடம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
தவிர, கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கான வரி கட்டி, அனுபவித்து வருகின்றனர். இங்குள்ள, 180 வீடுகளுக்கு, 2008ம் ஆண்டு வருவாய் துறை வாயிலாக, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 105 வீடுகளுக்கான இலவச பட்டா விரைவில் வழங்குவதாக அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், அஜ்ஜூர் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு சேருவதாக கூறி, 2017ம் ஆண்டு, 140 வீடுகளை காலி செய்ய வனத்துறை 'நோட்டீஸ்' வினியோகித்தது. இந்த நடவடிக்கையால் அஜ்ஜூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போதைய கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். அவர், 'அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். அப்பகுதி நில அளவை செய்ய வனத்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்படும். வன உரிமை சட்டத்தின் கீழ் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடியிருப்பதற்கான சான்று வழங்குபவர்களுக்கு அனுபோகம் வழங்கப்படும்,' என,தெரிவித்தார்.
இதற்கிடையே, மீண்டும் தொடர்ந்த வனத்துறை அச்சுறுத்தலால், கடந்த ஜூலை மாதம் கலெக்டரை சந்தித்து கிராம மக்கள் முறையிட்டனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் உறுதி அளித்தார்.
ஆர்.டி.ஐ., தகவல் இந்நிலையில், கணேஷ் ராமலிங்கம் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில், 'நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டம் கக்குச்சி கிராமத்தில் மறு நில அளவைக்கு முன்பு புல எண் - 596/1 மற்றும் 596/2 ஆகியவை கிராம மேய்க்கால் மற்றும் சுடுகாடு என பதிவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நிலமாகும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கிரீன் மவுன்ட்' அமைப்பின் தலைவர் கணேஷ் ராமலிங்கம் கூறுகையில்,'' தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட இந்த தகவலால், அஜ்ஜூர் கிராம மக்களிடைய பல ஆண்டுகளாக நிலவி வந்த அச்சம் தீர்வுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் வனத்துறைககு சொந்தமானது இல்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. இதை தொடர்ந்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

