/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கியூ.ஆர்.ஸ்கேன், வசதியுடன் புதிய வாட்டர் ஏ.டி.எம்.,; வெந்நீரும் வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
/
கியூ.ஆர்.ஸ்கேன், வசதியுடன் புதிய வாட்டர் ஏ.டி.எம்.,; வெந்நீரும் வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கியூ.ஆர்.ஸ்கேன், வசதியுடன் புதிய வாட்டர் ஏ.டி.எம்.,; வெந்நீரும் வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கியூ.ஆர்.ஸ்கேன், வசதியுடன் புதிய வாட்டர் ஏ.டி.எம்.,; வெந்நீரும் வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 03, 2025 06:36 AM

ஊட்டி: ஊட்டியில் கியூ.ஆர்.ஸ்கேன்., வசதியுடன், 5 இடங்களில் புதிய வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்; ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பேகுகள் உட்பட, 21 பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியரின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட முழுவதும், 45 வாட்டர் ஏ.டி.எம்., கள் அமைக்கப்பட்டன.
உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரிப்பில் போதிய அக்கறை காட்டாததால் பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்.,கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மேலும், அத்தயை வாட்டர் ஏ.டி.எம்.,களில் வரும் தண்ணீர் குறித்து, சுற்றுலா பயணிகள் மத்தியில் நம்பகதன்னை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், தனியார் குடிநீர் நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலா பயணியர், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், வாட்டர் ஏ.டி.எம்., அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று படகு இல்ல வளாகத்தில் வெந்நீர் வரும் புதிய வாட்டம் ஏ.டி.எம்., திறக்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரியில் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய வாட்டர் ஏ.டி.எம்.,களை தனியார் நிறுவனங்களில் நிதி உதவியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஊட்டியில் தலா, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 5 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏ.டி.எம்.,களில் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் என இரண்டு வகையான குடிநீர் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,களை பராமரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக மகளிர்களுக்கும் வாழ்வாதாரம் மேம்படும்.
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே சரி செய்யவும் வாரம் தோறும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஏ.டி.எம்.,களில் 'கியூ ஆர் ஸ்கேன்' வாயிலாக, அரை லிட்டர், 5 ரூபாய்; 1 லி., 10 ரூபாய் கட்டணத்தை செலுத்தி தண்ணீர் பிடித்து கொள்ளலாம்,''என்றார்.

