/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம்; வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

ADDED : ஜன 07, 2026 05:27 AM

கூடலுார்: முதுமலையில், 5 நாட்கள் நடைபெறும் புலிகள் உள்ளிட்ட, பிற வன உயிரினங்கள் கணக்கெடுப்பு குறித்து, வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில், இந்திய புலிகள் கணக்கெடுப்பு, 2026 பாகம்-1 கணக்கெடுப்பு பணிகள், இன்று துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று, நடந்தது.
வனச்சரகர்கள் சிவக்குமார், பாஸ்கரன், சீனிவாசன், ரங்கநாதன் ஆகியோர், புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது, வனப்பகுதிகளில் வன ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, உயிரியலாளர்கள் பழனிச்சாமி, நவீன் ஆகியோர், புலிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளின் நேரடி மற்றும் எச்சம், கால் தடம் மூலம் கணக்கெடுப்பு மற்றும் அதன் விபரங்களை பதிவு செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில் கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி வனச்சரக வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங் கேற்றனர்.