/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு திட்ட களபயிற்சி துவக்கம் முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா ரத்து
/
புலிகள் கணக்கெடுப்பு திட்ட களபயிற்சி துவக்கம் முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா ரத்து
புலிகள் கணக்கெடுப்பு திட்ட களபயிற்சி துவக்கம் முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா ரத்து
புலிகள் கணக்கெடுப்பு திட்ட களபயிற்சி துவக்கம் முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா ரத்து
ADDED : செப் 24, 2025 11:40 PM

கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தில், தென் மண்டல அளவிலான புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், தேசிய புலிகள் ஆணையத்தின் சார்பில், '2026ல் அகில இந்திய புலிகள் மதிப்பீடு' குறித்து தென் மண்டல அளவிலான மூன்று நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர் வரவேற்றார்.
தமிழக கூடுதல் தலைமை வன உயிரின பாதுகாவலர் வேணு பிரசாத், தலைமை வகித்து துவக்கி வைத்தார். தேசிய புலிகள் ஆணையத்தின் தென் மண்டல டி.ஐ.ஜி., வைபவ் சந்திரமாதுார், இந்திய புலிகள் மதிப்பீடு, கணக்கெடுப்பின் அவசியம் குறித்து விளக்கினார்.
தேசிய புலிகள் ஆணையத்தின் ஏ.ஐ.ஜி., ஹரிணி, கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் கள இயக்குனர் பிரபாகரன் ஆகியோர், புலிகள் கணக்கெடுப்பு முறைகள் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
முகாமில், முதுமலை துணை இயக்குனர் கணேஷ், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேச புலிகள் காப்பக வன அதிகாரிகள், வனச்சரகர்கள் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் நிபுணர்கள் பங்கேற்றனர்.
முதல் நாளான நேற்று, புலிகள் கணக்கெடுப்பு திட்டம் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து புலிகள் கணக்கெடுப்பு குறித்த கள பயிற்சி நடந்தது.
இரண்டாவது நாளான இன்று, 'வனப்பகுதியில் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு,' குறித்து கள பயிற்சி நடக்க உள்ளது. மூன்றாவது நாளான நாளை, 'நேர்கோட்டு முறையில் வனவிலங்கு கணக்கெடுப்பு,' குறித்த கள பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வனத்துறை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வனத்துறையினர் செய்துள்ளனர்.
பயிற்சி முகாம் காரணமாக, நேற்று முன்தினம் முதல், நாளை வரை முதுமலையில் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.