தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வனத்தில் புலி தாக்கி சிறுத்தை உயிரிழப்பு

வனத்தில் புலி தாக்கி சிறுத்தை உயிரிழப்பு

வனத்தில் புலி தாக்கி சிறுத்தை உயிரிழப்பு


ADDED : அக் 30, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: முதுமலை, கார்குடி வன பகுதியில், புலியுடன் ஏற்பட்ட சண்டையில், காயமடைந்த சிறுத்தை உயிரிழந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட, வட்டச் சாலை பகுதியில் நேற்று (அக்.,29), மாலை முன்கள வனப் பணியாளர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மண்சாலையில் உள்ள கண்காணிப்பு கோபுரம் அருகே, சிறுத்தை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

முதுமலை துணை இயக்குனர் கணேசன், வனச்சரகர் சிவக்குமார் அதன் உடலை இன்று (அக்.,30), ஆய்வு செய்தனர். உடலை மாயார் அரசு கால்நடை டாக்டர் இந்துஜா, மசினகுடி அரசு கால்நடை டாக்டர் சுவேதா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

வனச்சரகர் சிவக்குமார் கூறுகையில், ‘‘இறந்த ஆண் சிறுத்தைக்கு, 9 வயது இருக்கும். புலியுடன் ஏற்பட்ட சண்டையில், புலி தாக்கியதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us