தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குவாரி குழியில் மூழ்கி மாயமான டிப்பர் லாரி ஓட்டுநர் உடல் மீட்பு

குவாரி குழியில் மூழ்கி மாயமான டிப்பர் லாரி ஓட்டுநர் உடல் மீட்பு

குவாரி குழியில் மூழ்கி மாயமான டிப்பர் லாரி ஓட்டுநர் உடல் மீட்பு


ADDED : அக் 30, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு அருகே செயல்படாத கல்குவாரியில் மண் கொட்டி நிரப்பிய போது, டிப்பர் லாரி கவிழ்ந்து மூழ்கிய போது மாயமான டிரைவரின் உடல் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருத்தால, சாத்தனூர் சாலாச்சி பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் தாஹிர், 36. இவர், கறுகப்புத்தூர் பகுதியில் உள்ள பயனற்ற கல்குவாரியில், மண் கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று (அக்.,29) காலை மண் குவியல் திடீரென சரிந்து, டிப்பர் லாரி பின்னோக்கி கவிழ்ந்தது. இதில் லாரி குவாரி குழியில் இருந்த சேற்றில் புதைந்தது.

பட்டாம்பி, ஷொர்ணூர் மற்றும் மலப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் நீண்ட நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதன்பின், மூன்று கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி மேலே தூக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,30) காலை தாஹிரின் உடல் சேற்றில் இருந்து மீட்கப்பட்டது. சாலிச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us