/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்திற்குள் புலி நடமாட்டம்; கிலி அடைந்துள்ள உள்ளூர் மக்கள்
/
கிராமத்திற்குள் புலி நடமாட்டம்; கிலி அடைந்துள்ள உள்ளூர் மக்கள்
கிராமத்திற்குள் புலி நடமாட்டம்; கிலி அடைந்துள்ள உள்ளூர் மக்கள்
கிராமத்திற்குள் புலி நடமாட்டம்; கிலி அடைந்துள்ள உள்ளூர் மக்கள்
ADDED : அக் 15, 2025 11:06 PM

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, கிராமப்பகுதியை ஒட்டிய கம்பிகல்லு தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலியால் மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
ஊட்டி தொட்டபெட்டா அருகே குந்தச்சப்பை மற்றும் தும்மனட்டி கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில், வனத்தை ஒட்டி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட, பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, மூன்றுநாட்களுக்கு முன்பு, குந்தசப்பை -அருகே கம்பிகல்லு என்ற இடத்தில், புலி நடமாடியுள்ளது.
இதனை, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்டு அச்சம் அடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, வனத்துறையினர், புலி நடமாட்டத்தை உறுதி செய்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர். கண்காணிப்பு தொடர்கிறது.
இதே பகுதியில், கடந்த, 2014ல் புலி தாக்கியதில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், பல கால்நடைகள் புலி தாக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இங்கு ஆய்வு செய்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.