/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் பாதாள சாக்கடை ஓடுவதால் அடிக்கடி பாதிப்பு
/
சாலையில் பாதாள சாக்கடை ஓடுவதால் அடிக்கடி பாதிப்பு
ADDED : அக் 15, 2025 11:06 PM
ஊட்டி: வாகன நெரிசல் மிகுந்த ஊட்டி- கூடலுார் சாலையில் ஓடும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்படுகிறது.
ஊட்டி நகராட்சியில் , 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் குழாய்களில் குப்பை கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் வழிந்தோடுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தீர்வு காண போதிய நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் , ஊட்டி- -கூடலுார் பிரதான சாலை கூட்செட் சாலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடியது. பொதுமக்களின் புகாரால் நேற்று பகல் நேரத்தில் சீரமைப்பு பணி நடந்தது. இதனால், முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பயணிகள் கூறுகையில், ' நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து குறைந்த நேரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.