/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கைரளி அருவங்காடு அமைப்பின் ஓணம் திருவிழா
/
கைரளி அருவங்காடு அமைப்பின் ஓணம் திருவிழா
ADDED : அக் 15, 2025 11:05 PM

குன்னுார்: குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள, கைரளி அருவங்காடு அமைப்பின், 43வது ஆண்டு விழா மற்றும் ஓணம் விழா, கார்டைட் தொழிற்சாலை கலாசார மண்டபத்தில் நடந்தது.
கைரளி தலைவர் நவீன் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். செயலாளர் கில்ஷன் லோபெஸ் வரவேற்றார்.
ஊட்டி 'ஒருமா' தலைவர் நித்ய சத்யா, மலையாளம் மிஷன் ஒருங்கிணைப்பாளர் ரிஜில், மகளிர் பிரிவு செயலாளர் ஜிபி கில்ஷன் விழா குறித்து பேசினர்.
கார்டைட் தொழிற்சாலை முதன்மை பொது மேலாளர் விகாஸ் புர்வார், பொது மேலாளர் சலாதியா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மலையாளம் மிஷன் மாணவர்கள் நடன நிகழ்ச்சி, மகளிர் பிரிவினரின் திருவாதிரகளி மற்றும் 'தனல் நிலம்பூர்' குழுவினரின் 'செம்பட்டு' கலாசார நிகழ்ச்சி நடந்தது. கலாசார செயலாளர் சனீஷ் நன்றி கூறினார்.