/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வண்டலுார் உயிரின பூங்காவில் புலியின் காயங்களுக்கு சிகிச்சை
/
வண்டலுார் உயிரின பூங்காவில் புலியின் காயங்களுக்கு சிகிச்சை
வண்டலுார் உயிரின பூங்காவில் புலியின் காயங்களுக்கு சிகிச்சை
வண்டலுார் உயிரின பூங்காவில் புலியின் காயங்களுக்கு சிகிச்சை
ADDED : டிச 13, 2025 08:00 AM
கூடலுார்: முதுமலை மாவனல்லா பகுதியில் கூண்டில் சிக்கிய, 15 வயது ஆண் புலி, 15 மணி நேர பயணத்துக்கு பின், வண்டலுார் உயிரின பூங்காவில் ஒப்படைக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதுமலை மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த, 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது. அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நான்கு இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம், அதிகாலை புலி கூண்டில் சிக்கியது. வனத்துறை ஆய்வில், 15 வயதான ஆண் புலியின், கால், மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. வயது முதிர்வு காரணமாக, அதனால் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, அதிகாரிகள் உத்தரவுப்படி, புலியை பாதுகாப்பாக லாரியில் ஏற்றி மாலை, 3:00 மணிக்கு, மசினகுடியில் இருந்து வண்டலுார் உயிரின பூங்காவுக்கு வனத்துறையினர் புறப்பட்டனர். சிங்கார வனச்சரகர் தனபால், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள் உடன் சென்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு ஓசூர் வழியாக, 15 மணி நேரம் பயணத்துக்கு பின் நேற்று காலை, 6:00 மணிக்கு லாரி வண்டலுார் உயிரின பூங்கா சென்று, அங்குள்ள நிர்வாகத்திடம் புலியை ஒப்படைத்தனர். அங்கு புலியின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'புலி பாதுகாப்பாக, வண்டலுார் உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது. புலி நல்ல நிலையில் உள்ளது. சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது,' என்றனர்.

