/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 1,850 கோடி குந்தா நீரேற்று மின் திட்ட பணி இது வரை 150 அடி நீர் வெளியேற்றம்

ADDED : பிப் 16, 2025 10:55 PM
ஊட்டி, ;ஊட்டி அருகே, 1,850 கோடி ரூபாய் குந்தா நீரேற்று திட்ட பணிக்காக எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து, 150 அடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஊட்டி அருகே காட்டு குப்பையில் குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட இரு அணைகளில் தண்ணீர் வெளியேற்றினால் தான் அடுத்த கட்டப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 160 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டது. கடந்த நவ.,10ம் தேதி முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆரம்பத்தில், வினாடிக்கு 1000 அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இது வரை, 150 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வெளியேற்றப்படும் தண்ணீரால் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்தில், தேவைக்கேற்ப தண்ணீரை கோவை மக்களுக்கு தடையின்றி குடிநீரை வினியோகிக்க முடிகிறது.