/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முயற்சி: குடியிருப்பை சுற்றி கண்ணாடி பாட்டில்களில் தோரணம்
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முயற்சி: குடியிருப்பை சுற்றி கண்ணாடி பாட்டில்களில் தோரணம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முயற்சி: குடியிருப்பை சுற்றி கண்ணாடி பாட்டில்களில் தோரணம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முயற்சி: குடியிருப்பை சுற்றி கண்ணாடி பாட்டில்களில் தோரணம்
ADDED : மார் 01, 2024 10:02 PM

பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க, கிராம மக்கள் மரங்களில் கண்ணாடி பாட்டில்களால் தோரணம் கட்டி வருகின்றனர்.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் காட்டு யானைகள், மக்கள் குடியிருக்கும் கிராம பகுதிகளுக்கு எளிதாக வந்து செல்கின்றன. அதில், சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதி, தமிழகம்- கேரளா-- கர்நாடகா யானைகள் வந்து செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்த வழித்தடங்களை ஒட்டி பல்வேறு கிராமங்களில், மக்கள் குடியிருப்புகள், டான்டீ தேயிலை தோட்டகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் யானைகள் வந்து தொல்லைகள் ஏற்படுத்தும் போது, வனத்துறையினர் அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்.
எனினும், போதிய உபகரணங்கள் இல்லாத நிலையில், யானைகளை முழுமையாக வனத்துறையினரால் விரட்ட முடியவில்லை. இதனால் மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வராமல் தடுக்கும் வகையில், பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
அதில், கிராம எல்லைகள் மற்றும் குடியிருப்பு நுழைவு வாயில்களில், காலி மதுபான பாட்டில்களை அதிக அளவில் மரங்கள், குடியிருப்பின் சுற்றுப்புற பகுதிகளில் கட்டி தோரணம் போல தொங்க விட்டுள்ளனர். யானைகள் வரும் போது, பாட்டில்களில் மோதினால், எழும் சப்தம் அவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால். அங்கிருந்து சென்று விடுகிறது.
மக்கள் கூறுகையில்,'இந்த புதிய முயற்சியால், யானைகள் தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், பாட்டில்களில் எழும் சப்தம் கேட்டு யானைகள் அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறது. இதன் மூலம் தங்களுக்கு யானைகளிடமிருந்து மீது ஓரளவு பாதுகாப்பு கிடைக்கிறது,' என்றனர்.

