/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக - கர்நாடக எல்லையில் ரூ.26.5 லட்சம் மதியிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
தமிழக - கர்நாடக எல்லையில் ரூ.26.5 லட்சம் மதியிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழக - கர்நாடக எல்லையில் ரூ.26.5 லட்சம் மதியிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழக - கர்நாடக எல்லையில் ரூ.26.5 லட்சம் மதியிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 13, 2024 01:12 PM

கூடலூர்: கூடலூர் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 26.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, லாரியுடன் ஒருவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடகாவில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்துவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் உத்தரவுபடி, தமிழக - கர்நாடக எல்லையான, முதுமலை காக்கநல்லா சோதனை சாவடியில், எஸ்.ஐ., கண்ணன் மற்றும் போலீசார் நேற்று, மாலை முதல் வாகன சோதனையை தீவிர படுத்தினர்.இரவு 7:15 மணிக்கு, கர்நாடகாவில் இருந்து வந்த லாரியை, போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில், சக்கரை மூட்டைகளுக்கு கீழ், 240 மூட்டைகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது. லாரியுடன் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கேரளா பாலக்காடு கோர்கோழி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 46, என்பவரை கைது செய்தனர்.மேல் விசாரணைக்காக மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர்.
கூடலூர் டி.எஸ்.பி., (பொ.) செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில், சக்கரை மூட்டைகளுக்கு கீழ் மறைத்து வைத்து, கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த எடை 3600 கிலோவாகும். இதன் மதிப்பு 26.54 லட்சம் ரூபாயாகும். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என, கூறினர்.