/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 07, 2024 10:43 PM

ஊட்டி : ஊட்டியில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் உட்பட, துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தாலும், இப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் சில இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவுப்படி, தனி பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஊட்டி லவ்டேல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. தனிப்பிரிவு காவலர் ஜெயசீலன் வேல்வியூ பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டு, அதனை பறிமுதல் செய்தார். அதன் மதிப்பு, 1.20 லட்சம் ரூபாய். வழக்கு பதிவு செய்த போலீசார், கடை உரிமையாளர் பஷீர்,53, என்பவரை கைது செய்தனர்.

