ADDED : ஜன 31, 2024 11:40 PM
சூலுார் : சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில், தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தோட்டக்கலைத்துறை சார்பில், சுல்தான்பேட்டை விவசாயிகளுக்கு இலவசமாக தக்காளி நாற்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம், 10 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு , ஒரு எக்டருக்கு, 12 ஆயிரத்து, 500 நாற்றுகள் வழங்கப்படும். நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம்.
ஆதார் நகல், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் இரண்டு ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் தகுதி உள்ள விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாற்றுகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.