/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொகுதியில் நாளை, 6:00 மணியுடன்... பிரசாரம் ஓய்கிறது!மாவட்டம் முழுவதும் ஓட்டுப்பதிவு பணி 'விறுவிறு'
/
தொகுதியில் நாளை, 6:00 மணியுடன்... பிரசாரம் ஓய்கிறது!மாவட்டம் முழுவதும் ஓட்டுப்பதிவு பணி 'விறுவிறு'
தொகுதியில் நாளை, 6:00 மணியுடன்... பிரசாரம் ஓய்கிறது!மாவட்டம் முழுவதும் ஓட்டுப்பதிவு பணி 'விறுவிறு'
தொகுதியில் நாளை, 6:00 மணியுடன்... பிரசாரம் ஓய்கிறது!மாவட்டம் முழுவதும் ஓட்டுப்பதிவு பணி 'விறுவிறு'
ADDED : ஏப் 15, 2024 09:29 PM
ஊட்டி:தேர்தல் பிரசாரம் நாளை மாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது; 19ம் தேதி நடக்க உள்ள ஓட்டு பதிவுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
நீலகிரி லோக்சபா தொகுதி, ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது.
இதில், '6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள்; 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள், 97 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், 20 தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 27ம் தேதி நிறைவடைந்தது. 'நீலகிரி லோக்சபாவில், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள்,' என, 16 பேர் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட ஆறு தொகுதிகளில், 1,619 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளையுடன் ஓய்கிறது
நீலகிரி லோக்சபாவில் பா.ஜ.,-தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த, 15 நாட்களாக கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நாளை, 17 ம் தேதி மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் முடிவடைவதால் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் இரண்டு நாட்களில் கட்சியினர் வாக்காளர்களிடம் பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மற்றும் தொகுதி செலவின பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு விதி மீறல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தவிர, ஓட்டு சாவடிகளில் ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தயார்படுத்தியுள்ளனர்.
நாளை, பிரசாரம் ஓய்கிறது, 18 ம் தேதி எவ்வித பிரசாரமும் மேற்கொள்ள கூடாது. தேர்தல் பணியில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் அந்தந்த தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ' ஸ்ட்ராங்' ரூமிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு சாவடி மையத்திற்கு எடுத்து செல்கின்றனர்.
19ம் தேதி காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு போட அதிக வாக்காளர்கள் வந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி, ஓட்டு போட அனுமதிக்கின்றனர்.

