/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏலத்தில் ரூ.20.89 கோடி மொத்த வருமானம்; 'இன்கோ' தேயிலை உற்பத்தி சரிவு
/
ஏலத்தில் ரூ.20.89 கோடி மொத்த வருமானம்; 'இன்கோ' தேயிலை உற்பத்தி சரிவு
ஏலத்தில் ரூ.20.89 கோடி மொத்த வருமானம்; 'இன்கோ' தேயிலை உற்பத்தி சரிவு
ஏலத்தில் ரூ.20.89 கோடி மொத்த வருமானம்; 'இன்கோ' தேயிலை உற்பத்தி சரிவு
ADDED : ஜன 12, 2025 10:54 PM
குன்னுார்; குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில், 20.89 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டின், 2வது ஏலம் நடந்தது. அதில், '15.66 லட்சம் கிலோ இலை ரகம்; 4.04 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 19.70 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'13.30 லட்சம் கிலோ இலை ரகம்; 2.55 டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 15.85 லட்சம் கிலோ விற்பனையானது.
சராசரி விலை கிலோவிற்கு, 126.56 ரூபாய் என இருந்தது. சராசரி விலையில் கிலோவிற்கு, 2 ரூபாய் வீழ்ச்சியை கண்டது. மொத்த வருமானம், 20.07 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 27 ஆயிரத்து 464 கிலோ விற்பனை குறைந்தது.
போராட்டம் காரணமாக சரிவு :
நீலகிரியில் 'இன்கோ' கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், குந்தாவில், 8 தொழிற்சாலைகளில் அங்கத்தினர்கள் பசுந்தேயிலை வழங்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பொதுவாக ஒரு லட்சம் கிலோவிற்கு மேல் உற்பத்தி இருக்கும் நிலையில், நடந்த ஏலத்திற்கு, 75 ஆயிரத்து 709 கிலோ மட்டுமே வந்தது.
அதில், 73 ஆயிரத்து 555 கிலோ விற்றது. கிலோவிற்கு சராசரி விலை, 120.12 ரூபாய் என இருந்தது. 88.35 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. இரு ஏல மையங்களில் சேர்த்து, 20.89 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
இதேபோல, கோவை ஏல மையத்தில், 5.31 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 40.89 லட்சம் கிலோ விற்பனையானது. 76.94 சதவீதம் விற்ற நிலையில், சராசரி விலை கிலோவிற்கு, 148.74 ரூபாய் என இருந்தது.