/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தில் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டி; வனத்துறை ரூ. 80 ஆயிரம் அபராதம்
/
வனத்தில் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டி; வனத்துறை ரூ. 80 ஆயிரம் அபராதம்
வனத்தில் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டி; வனத்துறை ரூ. 80 ஆயிரம் அபராதம்
வனத்தில் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டி; வனத்துறை ரூ. 80 ஆயிரம் அபராதம்
ADDED : நவ 24, 2025 05:23 AM

கோத்தகிரி: வன விலங்குகளின் நடமாட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று காண்பித்த சுற்றுலா வழிகாட்டி மீது வழக்கு பதிவு செய்து, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, பகுதிகளில் உள்ள காப்புக்காடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து, சுற்றுலா வழிகாட்டிகள் பணம் பெற்றுக் கொண்டு வனவிலங்கு நடமாட்டத்தை காண்பித்து வருவதாக புகார் இருந்து வருகிறது.
இதுகுறித்து, கோத்தகிரி வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வனச்சரகம் வாயிலாக, தனி குழு அமைத்து வனப்பகுதிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி அளவில் கோத்தகிரி வனச்சரகம் நெடுகுளா காப்பு காட்டில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் விசாரிக்கபட்டனர்.
விசாரணையில், 'குறிப்பிட்ட இடம் வனப்பகுதி என தெரிவிக்காமல், கோத்தகிரி அரவேனு பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 59, என்ற சுற்றுலா வழிகாட்டி அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிவலிங்கம் என்பவருக்கு, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில், சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் விதமாக, அத்துமீறி வனப்பகுதிக்குள் அழைத்து செல்பவர்கள மீது, கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்'. என்றனர்.

