/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இங்கிலாந்து பயணிகள் ஆட்டோவில் சுற்றுப்பயணம்
/
இங்கிலாந்து பயணிகள் ஆட்டோவில் சுற்றுப்பயணம்
ADDED : டிச 03, 2024 08:40 PM

குன்னுார்; தொழு நோயாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் விழிப்புணர்வுக்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, 12 சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராவின் என்பவரின் தலைமையில், 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துள்ளனர். தொழு நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவும் விழிப்புணர்வுக்காக, கடந்த, 25ம் தேதி சென்னையில் இருந்து, 6 ஆட்டோக்களில் தமிழக மற்றும் கர்நாடகாவில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
புதுவை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக, நீலகிரி மாவட்டம், குன்னுார் மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து, மைசூரு, பெங்களூரு சென்ற இவர்கள் நாளை சென்னையை அடைகின்றனர். 2000 கி.மீ., துாரம் ஆட்டோ பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்த குழுவினர் தெரிவித்தனர்.