/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல வடிவிலான வண்ண ஆர்கிட் பூக்கள் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
/
பல வடிவிலான வண்ண ஆர்கிட் பூக்கள் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
பல வடிவிலான வண்ண ஆர்கிட் பூக்கள் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
பல வடிவிலான வண்ண ஆர்கிட் பூக்கள் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : அக் 22, 2025 11:36 PM

கூடலூர்: கூடலூர், ஜீன்பூல் தாவர மையத்தில், பூத்துள்ள பல வடிவிலான வண்ண ஆர்கிட் பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி பல அரிய வகை தாவரங்களின் வாழ்விடமாகும். இங்கு பூச்சிகளை உண்டு வாழும் அரிய வகை தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏராளமான ஆர்கிட் செடிகளும் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு, கண்டறியப்பட்ட 70க்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர் செடிகள், கூடலூர் ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் பசுமை குடில் அமைத்து வளர்க்கப்படுகிறது.
ஆர்கிட் செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சீசனில் மலர கூடியவை. இதன் பூக்கள், வண்ணம் மற்றும் வடிவம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படும். பூக்கள் மலர்ந்து ஒரு வார முதல் மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும்.
தற்போது, இங்கு பூத்துள்ள கோலோயோஜின் ஒவலிஸ், பேஸ்டேங்கர்வில்லே ஆகிய ஆர்கிட் பூக்கள், மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஆர்கிட் பூக்கள், செடிக்கு செடி மாறுபட்ட வடிவு மற்றும் பல வண்ணங்கள் பார்க்க வியப்பாக உள்ளது' என்றனர்.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'ஆர்கிட் செடிகள் கஸ்ட பட்டை, ஈட்டி, பலா மரங்கள், ஈரத் தன்மை கொண்ட பாறைகளில் ஒட்டுண்ணியாக வளர கூடியவை. நிலத்திலும் வளர்கிறது. இவைகள் ஒவ்வொன்றும் வடிவத்திலும் வண்ணத்திலும் மாறு பட்டு காணப்படும். மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இவைகளை கண்டறிந்து பாதுகாப்பது அவசியமாகும்' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஜீன்புல் தாவர மையத்தில், ஆர்க்கிடோரியம் எனப்படும் ஆர்க்கிட் பூங்காவை மேம்படுத்த தமிழக அரசு 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
'இதில் முதல், கட்டமாக அரசு வழங்கியுள்ள 75 லட்சம் ரூபாய் நிதியில் ஆர்க்கிடோரியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது' என்றனர்.