/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்: பொங்கல் விடுமுறையில் குதூகலம்
/
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்: பொங்கல் விடுமுறையில் குதூகலம்
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்: பொங்கல் விடுமுறையில் குதூகலம்
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்: பொங்கல் விடுமுறையில் குதூகலம்
ADDED : ஜன 15, 2024 11:22 PM

குன்னுார்;பொங்கல் விடுமுறையையொட்டி, ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், மலை ரயிலில் பயணம் செய்யவும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
குன்னுார்- ஊட்டி இடையே தலா, 4 முறை இயக்கப்படும் மலை ரயிலில், 5 பெட்டிகளிலும், 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே தலா ஒரு முறை இயக்கப்படும் மலை ரயில்களில், 210 இருக்கைகள் முழுவதும் முன் பதிவாகிவிடுகிறது.
சிறப்பு ரயில் இயக்கம்:
பொங்கல், குடியரசு தின விடுமுறையையொட்டி, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 9:10 மணிக்கு 3 பெட்டிகளுடன் நேற்று புறப்பட்ட சிறப்பு மலை ரயில், குன்னுாருக்கு, 12:00 மணிக்கு வந்து சேர்ந்தது. குன்னுாரில் இருந்து கூடுதலாக இரு பெட்டிகள் இணைத்து, ஐந்து பெட்டிகளுடன் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. இதில், 220 பயணிகள் பயணம் செய்தனர்.
தொடர்ந்து, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 16ம் தேதி (இன்று), 21, 26, 28 ஆகிய தேதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும், 18, 25 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.