sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்

/

சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்

சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்

சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்


ADDED : ஜூலை 03, 2024 09:10 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனையில் தொடரும் சுரண்டலால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்க குன்னுார் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலா மையங்களுக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரனின தொகுதியில் உள்ள இந்த சுற்றுலா மையங்களில் பார்க்கிங், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது.

காட்சிமுனை வளாகத்தில் டான்டீ கடை சுற்றுலா பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இங்கு பர்லியார் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வருவதில்லை.

குறிப்பாக டால்பின் நோஸ் மையத்தில் குப்பைஅகற்ற கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள ஒரு கழிப்பிடமும் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. சாலையும் ஆங்காங்கே சேதமடைந்து வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பு அதிகம்


டால்பின்நோஸ் காட்சிமுனை வரை உள்ள அதிகளவிலான ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. சமீபத்தில் இங்கு ஐகோர்ட் நீதிபதிகள் விசிட் செய்த போது உள்ளே செல்ல சிரமப்பட்டதால், கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, போலீசார், பஞ்., நிர்வாகத்தினர் அப்போது அகற்றிய போதும், மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகாரித்துள்ளது.

யாருக்கு செல்கிறது ?


இங்குள்ள, 8 ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்ல முடியால் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுகிறது. அதில், ஏழை எளிய ஊனமுற்றோருக்கு என இல்லாமல் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் கடைகள் அமைப்பதாகவும், புதிய ஆக்கிரமிப்பு கடைகளிடம் இருந்து ஆளும் கட்சியினர் லாபம் பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் வரை புகார் சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பார்க்கிங் கொள்ளை


சாலையில் வாகனங்கள் நிறுத்த பர்லியார் ஊராட்சி தனியாருக்கு டெண்டர் விட்டு இருசக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு,30 ரூபாய்; வேன் மற்றும் மேக்சி கேப்களுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், முறையே, 30,70,100 ரூபாய் என விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கலெக்டர் உத்தரவால், இங்கு வைக்கப்பட்டு இருந்து கூடுதல் கட்டண அறிவிப்பு போர்டு அகற்றப்பட்டும், மீண்டும் கட்டண கொள்ளை அதிகரித்துள்ளது. இதனை கண்டு கொள்ள யாரும் இல்லை.

தொடரும் தில்லு முள்ளு


கொச்சி சுற்றுலா பயணி கள் கூறுகையில், ''ஒரு காரில் குடும்பத்துடன் இங்கு வந்த போது, 100 ரூபாய் வசூல் செய்தனர். டிக்கெட்டில், 3 கார்களுக்கு, 100 ரூபாய் என பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் 'பிரின்டிங் மிஸ்டேக்' என்கின்றனர். ஆனால், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசூல் மட்டுமே இங்கு குறிக்கோளாக உள்ளது,'' என்றனர்.

வாழ்வாதாரம் தான்


ஊராட்சி தலைவி சுசீலா கூறுகையில், ''மக்களின் வாழ்வாதாரத்திற்காக வந்து கேட்டனர். இதற்காக புதிய கடைகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம், 12 கடைகளுக்கு ஏலம் விடப்படும். ஏற்கனவே ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us