/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ;தடை விதிக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
/
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ;தடை விதிக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ;தடை விதிக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ;தடை விதிக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2024 11:44 PM
கோத்தகிரி : 'கோத்தகிரி 'கோம்ஸ்' நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிப்பதுடன், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கிராம மக்கள் வலிறுதியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா வரைப்படத்தில் இடம்பிடித்த சுற்றுலா மையங்களை தவிர்த்து, அங்கீகரிக்கப்படாத சுற்றுலா மையங்கள் நிறைந்துள்ளன.
கோத்தக்கிரியை பொருத்தமட்டில், கோடநாடு காட்சி முனை, கேத்ரின் காட்சி முனை முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனை தவிர்த்து, கன்னேரிமுக்கு அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, கோடநாடு சாலையில் அமைந்துள்ள சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சிக்கு வார விடுமுறை நாட்களிலும் கூட, பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வருபவர்கள் அங்கேயே உணவு சமைத்து உணவு அருந்துவதுடன், பல இளைஞர்கள் மது குடித்து நடனமாடுவது தொடர்கிறது.
மேலும், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் உட்பட மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவது தொடர்கிறது.
மேலும், மதுபோதையில் ஏற்படும் மோதலால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இங்கு, வனத்துறை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, 'ஆபத்தான நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை,' என, எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், தடையை மீறி குளிப்பது தொடர்ந்துள்ளது.
கடந்த காலங்களில், தடையை மீறி குளிக்க சென்ற கல்லுாரி மாணவர்கள், பாசி படர்ந்த பாறையில் வழுக்கியும், சுழலில் சிக்கியும் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
சுண்டட்டி கிராம மக்கள் கூறுகையில்,'வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை விதித்து, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.